தமிழ் සිංහල English
Breaking News

நெடுங்கேணி பிரதேச சபையை கூட்டமைபை்பு கைப்பற்றியது..!

வவுனியா நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைபை்பு  கைப்பற்றியுள்ளது. தவிசாளராக ச.தணிகாசலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணி பிரதேச சபையின் தவிசாரைத் தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தவிசாளர் மற்றும் உப தவழசாளரைத் தெரிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் கூட்டமைப்பின் சார்பில் தணிகாசலமும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் ஜெ.ஜெயரூபனும் போட்டியிட்டனர்.

இவ்வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட தணிகாசலத்திற்கு, கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினருமாக மொத்தம் 11 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜெயரூபனுக்கு, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும் சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 11 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில் இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றதால் குலுக்கல் முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தணிகாசலம் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து உப தவிசாளருக்கான தெரிவில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் து.தமிழ்ச்செல்வன், பொதுஜன பெரமுன சார்பில் க.விக்ரமபால மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நா.யோகராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதன்போது தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் து.தமிழ்ச்செல்வன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தமையை அடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட நா.யோகராஜாவிற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த விக்ரமபால 6 வாக்குகளை மாத்திரமே பெற்றார். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட யோகராஜா உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com