தமிழ் සිංහල English
Breaking News

அமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு விடயங்களை கையாளுகிறார்..!

அமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின் சட்டம் ஒழுங்குவிடயங்களை கையாள்வதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நிதி மோசடி பொலிஸ் பிரிவில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான விசாரணைநேற்று இடம்பெற்றபோது அப்பிரிவிற்கு முன்ன்னால் ஊடகங்களுக்கு  கருத்துவெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு விடயங்களைகையாள்கிறார்.அவர் எவ்வளவு பெரிய பொய்யர் என்பது இன்று உலக அறியும்.கெரம்போர்ட் இறக்குமதி செய்தமை தொடர்பிலும் ரக்பி விளையாடியதிலும் ஊழல்இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.இவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யே.

நிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மிகக் கவனமாக செயற்படவேண்டும்.அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப்படும் இவர்களை நாளையேஆட்சி மாற்றம் இடம்பெற்றால் காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள்.இது விடயமாகஅவர்கள் கவனம் எடுக்க வேண்டும்.

ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினரை மூடிய அறைக்குள் விசாரணை செய்வதற்குஏன் தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஏன் பொலிஸ் கலகம்அடக்கும் படை கொண்டு வரப்பட்டுள்ளது.இவை அனைத்துமே மக்கள் பணத்தைவிரயம் செய்யும் செயற்பாடு என அவர் குறிப்பிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com