தமிழ் සිංහල English
Breaking News

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 08 ஆம் திகதி..!

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமானது.

கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலாவது கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவந்திருந்தார்.

இந்த நிலையில், கோப் குழு கலைக்கப்பட்டு இரண்டாவது கூட்டத்தொடர் ஆரம்பமான பின்னர் புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பின் 70 ஆம் ஷரத்தின் ஊடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி இரண்டாவது கூட்டத்தொடருக்கான திகதிகளை நிர்ணயித்திருந்தார்.

ஒவ்வொரு துறை சார்ந்த 16 மேற்பார்வை குழுக்கள் மாற்றம் இன்றி செயற்படும் என்றும் முதல் கூட்டத்தொடரில் முறையாக ஒழுங்குபத்திரத்தில் சேர்க்கப்பட்ட பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com