திருகோணமலை, மொறவெவ பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிட்ட பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொறவெவ பிரதேச சபைக்கான முதலாவது அமர்வு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில், பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (16) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
தவிசாளர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஜகத் வேரகொட ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு, வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
இதில், மேலதிக இரண்டு வாக்குகளால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதுடன், பிரதித் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சாலிய ரத்னாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
இந்த முதல் அமர்வில், மொறவெவ பிரதேச சபைக்குத் தெரிவாகியிருந்த 16 உறுப்பினர்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். மொறவெவ பிரதேச சபையைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் தலைவர் தெரிவு நடைபெற்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகியவை இணைந்து, மொறவெவ பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.