தமிழ் සිංහල English
Breaking News

சிரியாவில் ஆயுதங்களை மலை போல் குவிக்கும் ரஷ்யா..!

குவியல் குவியலாக ஆயுதங்களுடன் ரஷ்ய போர் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்துள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று அமெரிக்க கூட்டுப்படைகளின் அதிரடி தாக்குதலுக்கு பின்னர் சிரியாவுக்கு ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் ரஷ்ய கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் தொடர்பில் இதுவரை புடின் வெளிப்படையான எந்த கருத்தையும் முன்வைக்காத நிலையில்,

சக்தி வாய்ந்த ரோந்து படகுகள், ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள், பீரங்கிகள் என கப்பல்களில் ஆயுதங்கள் சிரியா நோக்கி விரைவது ஆபத்தான அறிகுறியாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

வெள்ளியன்று தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் ரஷ்யாவின் 11 கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்துள்ளதாகவும், இது 4-வது முறையாக ரஷ்யா சிரியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மீதான தாக்குதலை பிரித்தானிய பிரதமர் மே, ஜேர்மானிய தலைவர் ஏஞ்சலா மற்றும் பலர் பாராட்டி பேசியுள்ள நிலையில்,

இணைந்து தாக்குதல் நடத்திய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வெளியிட்ட கருத்து கவனத்தில் கொள்ளும்படியாக அமைந்துள்ளது.

கூட்டுப்படைகளின் தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில், கடுமையான விளைவுகளை தாக்குதலில் ஈடுபட்ட நாடுகள் சந்திக்கும் என ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,

குறித்த தாக்குதலானது போருக்கான ஆயத்தமல்ல எனவும், அதை அவ்வாறு காண வேண்டாம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிரியா ராணுவம் அங்குள்ள அப்பாவி மக்கள் மீது மேலும் தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஷ்யா எந்த சலசலப்பும் இன்றி சிரியாவில் ஆயுதங்களை குவிப்பது, அடுத்த பதிலடிக்கு புடின் தயாராகி வருவதை சுட்டிக்காட்டுவதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com