தமிழ் සිංහල English
Breaking News

ஐ.தே.க.யின் மறுசீரமைப்பு தாமதம்..!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமையே ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் தாமதமாகியமைக்கு காரணமென, பிரதியமைச்சர் ஜே.சீ.அலவதுவல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பிரதமருக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள் தொடர்பில் இதுவரை எந்ததொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்காமல் இருக்கின்றது.

இவ்விடயம் காரணமாக ஐ.தே.க.வில் முன்னெடுக்கவிருந்த மறுசீரமைப்பு பணிகளும் காலதாமதமாகியுள்ளன.

இந்நிலையில் எது எவ்வாறாயினும் ஐ.தே.க.வின் மறுசீரமைப்பு குழுவின் தீர்மானங்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும். இதன்பொருட்டு கட்சியின் மறுசீரமைப்புக் குழு எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கூடும்” என அவர் தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com