தமிழ் සිංහල English
Breaking News

சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்..!

இலங்கை இராணுவம் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படைகளில் பணியாற்றும் இலங்கை இராணுவம் மூலம், 2004 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை இராணுவத்தைச் சேர்ந்த, 18 ஆயிரத்து 179 படையினர் வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர்.

தற்போது லெபனான், தென்சூடான், மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குடியரசு, மேற்கு சகாரா உள்ளிட்ட இடங்களில் இலங்கை இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையினர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com