தமிழ் සිංහල English
Breaking News

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி:க்ரிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம்!

2018 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 12வது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்ட, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மொஹாலியில் இடம்பெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில், துடுப்பாட்டத்தில் க்ரிஸ் கெய்ல் 33 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 63 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்று கொடுத்தார்.

பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

சென்னை சார்பாக அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி, ஆட்டமிழக்காது 44 பந்துகளில், 5 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் க்ரிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com