தமிழ் සිංහල English
Breaking News

லண்டன் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி..!

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டில் இருந்து புறப்பட்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று(15) இரவு 11.00 மணியளவில் லண்டன் நகரை சென்றடைந்துள்ளார்.

இன்று 16 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லண்டன் நகரில் நடைபெறும் 2018 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொண்டுள்ளார்.

‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்முறை மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, நியாயம், பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்ளை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இறுதியாக மோல்டா நாட்டில் நடைபெற்றது. தற்போது இவ்வமைப்புக்கு தலைமை வகிக்கும் மோல்டா இம்மாநாட்டின் போது தலைமைத்துவத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு வழங்கவுள்ளது.

இன்று(16) முதல் ஏப்ரல் 21ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவை சந்திக்கவுள்ளதுடன் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் அரச தலைவர்ளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் ஜனாதிபதி பொதுநலவாய வர்த்தக மன்றத்திலும் உரையாற்றவுள்ளார். பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பாக நடைபெறும் மாநாட்டின் பிரதான உரையை நிகழ்த்துவதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய விளையாட்டு சமேளனத்திலும் பிரித்தானிய மகாராணியின் 92வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் விசேட நிகழ்விலும் பங்குபற்றும் ஜனாதிபதி லண்டன் நகரில் உள்ள பௌத்த விகாரைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.,

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com