தமிழ் සිංහල English
Breaking News

பொதுஜன முன்னணியின் அரசாங்கத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்– வெல்கம!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசாங்கத்தையே, மக்கள் தற்போது எதிர்பார்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய அரசாங்கத்தினால் நீண்டகாலத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் நாட்டை அரைவாசிக்கும் மேல் அழிவுக்கு உட்படுத்திவிட்டது” என கூறினார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஆளும் கட்சிகளை விட அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டதன் பின்னணியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com