தமிழ் සිංහල English
Breaking News

காவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங்கள்.!

முதல் துரோகம்.
——————————
கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை” என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம்.

இரண்டாவது துரோகம்.
——————————————-
இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.

மூன்றாவது துரோகம்..
——————————————
3.) 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி

வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்..

நான்காவது துரோகம்
—————————————-
4.) காவேரி பிரச்சனையின் மூலாதாரமே கருணாநிதிதான். கர்மவீரர் காமராஜ் காலத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டவில்லை காவேரி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது . அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு நீட்டிக்க வேண்டும் என்பதே அனைவரும் ஒப்புக்கொண்டது .அதனை நீட்டிக்க முயற்சி எடுக்கவில்லை திராவிட கருணாநிதி .அதன் விளைவு கி.பி.1892-ம் ஆண்டு போடப்பட்ட முதல் ஒப்பந்தம் கருணாவின் அலட்சியத்தால் காலாவதியானது .இது தான் 219 ஆண்டு கால காவேரி நதி பங்கிட்டு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை பறிபோக முதன்மை காரணமாய் அமைந்து விட்டது

இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் – அணைகள் கட்டியதை – ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை ,கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை – ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை – தடுக்காத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை

ஐந்தாவது துரோகம் .
—————————————
5.காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .

மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான்

ஆறாவது துரோகம்
————————————-
காவேரி பிரச்சனையில் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார் .அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான்.இது கருணாநிதியின் ஆறாவது துரோகம்

மிக பெரிய ஏழாவது துரோகம்
——————————————————–
இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ – 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது , சென்னையில் முதல்வர் கருணாநிதி ,பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார் . அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை கருணாநிதி நீக்கி விட்டார் .

காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் மற்றும் அவரது ஊடகங்கள் தான் .

அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் இருந்திருக்கும் . அதனை இரக்கமின்றி அடைத்தவர் கருணாநிதி தான்.
இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் .

எட்டாவது துரோகம்
—————————————-
ஏற்கனவே ஒரு காங்கிரஸ் முதல்வர் (கண்ணனின் பெயர் கொண்டவர்) கர்நாடகாவில் ஆட்சி செய்தபோது ,ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி காவேரியில் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தர சம்மதம் தெரிவித்தார் .அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி காவேரியில் தண்ணீர் திறந்து விட்டால் ,ஜெயலலிதா புகழ் கூடிவிடும் .நான் சிறுமைப்படவேண்டி நிற்கும் நிலை வரும் என சொல்லி அதனை தடுத்து விட்டார் .இதனை அந்த காங்கிரஸ் முதல்வர் தனது சுயசரிதையில் தேதி முதற்கொண்டு சொல்லி உண்மையை புட்டு புட்டு வைத்து விட்டார்
இது கருணாநிதியின் எட்டாவது துரோகம்

ஒன்பதாவது துரோகம்
——————————————–
இந்திய பிரதமர்கள் வி பி சிங், நரசிம்மராவ் ,குஜ்ரால் ,தேவ கௌடா, வாஜிபாய் ஆகியோர் அமைச்சரவையில் பங்கு பெற்றார் ,, அதன் பிறகு மன்மோகன் சிங் ஆட்சியில் இவர் ஆதரவு இல்லை என்றால் ஆட்சியே இருக்காது
மிரட்டி மிரட்டி எத்தனையோ பதவிகள் வாங்கினார் கருணாநிதி. ஆனால் அப்போதும் கூட ,காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் கருணாநிதி . தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையானத் துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார் . ஆனால் அவர் அதை செய்ய வில்லை இது கருணாநிதியின் ஒன்பதாவது துரோகம்

பத்தாவது துரோகம்
————————————-
காவிரி வழக்கை வாபஸ் பெற்றால் ..தானே பிரச்சனையை சுமுகமாக முடித்து நியாயமான நீரைத்தருகிறேன் என இந்திரா சொன்னார். கூட்டணி ஆசைக்காக ( ஊழல் பாதுகாப்புக்காக?) அதனை ஏற்று திமுக வழக்கை வாபஸ் பெற்றது. இது கருணாநிதியின் ஒன்பதாவது துரோகம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் ஏமாற்றுவது தெரிந்தும் 35 ஆண்டுகளாக பெரும்பாலும் காங் கூட்டணிக்கே வாக்களித்து வந்துள்ளனர் விவசாயிகள்.

இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதி தான் .

தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல பல மடங்காக பெருக்கியவர் கருணாநிதி தான் .

காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல்வாதி இவர்தான் .ஆம் இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடு தான்,

இவர்கள் மக்கள் உயிரை பற்றியோ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வையோ விரும்பாதவர்கள்.

ஏமாற்றுவதற்கு அங்கீகாரம் கொடுத்தபின் ஏமாளி போராடுவது அபத்தம். அதன்மூலம் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்காமலிருக்கும் உரிமையை நிரந்தரமாக வழங்கிவிட்டோம்.

இன்றும் தமிழகத்தில். நூற்றுக்கணக்கான இந்திரா, ராஜீவ் சிலைகள் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கின்றன. ஆனாலும் எதிர்காலத்தில் சோனியா ராகுலுக்கும் சிலைவைத்து வணங்கப்போகிறான் மான மிகு தமிழன் வீராணம் ? கூவத்தை மணக்கவைத்த கருணாவுக்கும்தான்….

இவ்வளவு துரோகத்தையும் செய்து விட்டு அவர் மகன் உத்தமன் வேஷம் போடுகிறார் என்றால் தமிழ் மக்களின் அறியாமையை என்ன வென்று சொல்ல

இனியாவது விழித்துக்கொள் .

K.S. Bala Subramanian

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com