தமிழ் සිංහල English
Breaking News

புதுவருட வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன .!

பிறக்கின்ற புதுவருடத்தில் இலங்கை வாழ் அனைத்து மக்களும், சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும், செழிப்புடன் வாழ வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவரால் விடுக்கப்பட்டுள்ள புதுவருட வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பிறக்கின்ற புதுவருடமானது, நல்லிணக்கத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் வளமான ஒரு நாட்டிற்காகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவரால் விடுக்கப்பட்டுள்ள, வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்..

புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளையும் வெற்றி கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ புதிய வருடம் அமைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கள தமிழ் புத்தாண்டின் மூலம் அமெரிக்க-இலங்கை ராஜதந்திர உறவு, அத்துடன் நல்லாட்சி மற்றும் நல்லிணக்க முன்னேற்றம் குறித்து கொண்டாட முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சார்பாக, அமெரிக்க ராஜாங்க பதில் செயலாளர் ஜோன் சுல்லிவன் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க மக்களும் இலங்கையில் உள்ள சகல மக்களுக்கும் மகிழ்ச்சிகரமான புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் – சிங்கள புதுவருத்தை கொண்டாடுவதன் பொருட்டு பட்டாசு வெடிப்பொருட்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு மீண்டும் கோரப்பட்டுள்ளது.

வெடிப்பொருட்கள் கையாளும் போது பல விடையங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தேசிய மருத்துவமனையில் திடீர் அனர்த்த பிரிவு பயிற்சியாளர் புஸ்பா ரம்யானி சொய்சா கோரியுள்ளார்.

இதனிடையே, மது பாவனையை விடுத்து புதுவருடத்தை கொண்டாடுவதன் மூலம் அதன் முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என மதுபான மற்றும் போதைவஸ்து தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com