தமிழ் සිංහල English
Breaking News

சிம்புவின் பேச்சு மிகவும் மெச்சூராக இருந்தது..!

காவிரி விவகாரத்தில் சில அரசியல்வியாதிகள் தான் அரசியல் செய்கின்றன என்பதையும் சிம்பு கொடுத்த ஒரு பேட்டி கர்நாடகாவில் வெளிப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை குறித்து சிம்பு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பல்வேறு விஷயங்களை பேசினார் சிம்பு. அப்படி அவர் பேசியதை பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.

அந்த பேட்டியில் சிம்பு ஏப்ரல் 11ம் தேதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்றார்.

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மக்கள் #Unitedforhumanity எனும் ஹேஷ்டேகில் அப்பேட்டியில் சிம்பு கூறியவாறே புகைப்படங்களை பதிந்து வருகின்றனர். கர்நாடகாவில் உள்ளோர் அங்கிருக்கும் அவர்களுடைய தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல புகைப்படங்கள் எடுத்து இந்த ஹேஷ்டேகில் பதிந்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

கன்னட பெண்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், காவிரி அன்னை நாம் அனைவருக்கும் தாய். சென்னையில் 2015-இல் பெருவெள்ளம் ஏற்பட்டபோது நாங்கள்தான் உதவிகளை செய்தோம். காயமடைந்தவர்களுக்கு ரத்தத்தை கொடுத்தோம். ரத்தத்தையே கொடுத்த நாங்கள் தண்ணீரை கொடுக்க மாட்டோமா என்ன. சிம்புவின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என கூறியுள்ளார்.

`The Jewish Carpenter’ என்பவர், தனது தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், `சிம்புவின் பேச்சு மிகவும் மெச்சூராக இருந்தது. நான் நிறைய அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே செயல்படுவார்கள். ஆனால், நடிகர் சிம்பு பேசியதில் நிதர்சனமும் உண்மையும் இருந்தது. கன்னடர்களான நாங்கள், தமிழ் சகோதரர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் கைவிட்டுவிட மாட்டோம்.’ என கூறியுள்ளார்.தமிழர்களும் கன்னடர்களும் ஒருவரே. தண்ணீருக்காக சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம். நாம் அனைவரும் காவிரி தாயின் பிள்ளைகள். வெறுப்புகளை கடந்து நாம் ஒன்றாக வாழ்வோம். தண்ணீரை சரிசமமாக பகிர்ந்து கொள்வோம் என்று கூறி தண்ணீரை பகிர்ந்து கொள்கின்றனர்.

அடுத்துவரும் வீடியோவில், கன்னட பெண் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் என்ன , ஒரு பாட்டில் தண்ணீரே தருவோம் என்று கூறி அதை தருகிறார்.

சிம்பு, காவிரி விவகாரத்தை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி. நீங்கள் ஒரு கிளாஸ் நீர் தான் கொடுக்க சொன்னீங்க. நாங்கள் ஒரு பாட்டில் நீர் கொடுக்கிறோம். தேவைப்பட்டால் இன்னும் நிறைய தருகிறோம். தமிழகத்துக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் தருகிறோம்.

மற்றொரு சிம்பு அவர்களுக்கு நமஸ்காரம். தண்ணீரை பகிர்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம் என்று கூறி அந்த கடையில் அமர்ந்துள்ள தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்தனர்.

மேலும் ஒரு வீடியோவில், இதுவரை எங்களை கெட்டவர்களாக தமிழக மக்களுக்கு சித்தரித்த இந்த அரசியல் வியாதிகளை நாங்கள் நம்புவதாக இல்லை, இனி தமிழர்களும் நாங்களும் ஒன்று தான் எங்களுக்கு இல்லை என்றாலும் சரி தமிழக மக்களுக்கு தண்ணீர் தருவோம் என வெளியிட்டுள்ளார். அதேபோல, கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என அக்கம் பக்கத்தில் இருக்கும் அவர்களது தமிழக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து தமிழக மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சிம்பு பேசிய வீடியோ, கர்நாடகாவில் இருக்கும் லோக்கல் நியூஸ் சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் சமூக வலைதளங்களில் நொடிக்கு நொடி ஆதரவு வலுத்து வருகின்றது. இதை உணர்ந்த சிம்பு, ஹேஷ்டேக்கை உருவாக்கி மதியம் 3 மணியில் இருந்து, மாலை 6 மணி வரை சிறு வீடியோவாக உருவாக்கி, அதில் அவர்களது ஆதரவை தெரிவிக்கச் சொன்னார். சொன்னதுபோலவே ட்விட்டரில் அந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com