தமிழ் සිංහල English
Breaking News

இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை.!

எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சமீபகால அரசியல் கொந்தளிப்பு நிலை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணை எதிரணியினராகிய நாம், இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையொன்றை முன்வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் ஆதரித்திருந்தனர். அவர்கள் எதிர்க் கட்சியின் ஆசனத்தில் அமரும்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள ஒருவருக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறான நிலைமை காரணமாகவே தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com