தமிழ் සිංහල English
Breaking News

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் கட்டாயமாக்கும் சட்டம் மே மாதம் 20.!

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் கட்டாயமாக்கும் சட்டம் மே மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் ஏப்ரல் 01 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளதுடன், மீற்றர்கள் பொருத்தாத முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் நன்மைக்காக இந்தச் சலுகை காலம் மீண்டும் ஒரு மாத காலத்தில் நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, மே 20 ஆம் திகதியாகும் போது இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் முச்சக்கரவண்டி பயணிகளுக்கு பற்றுச்சீட்டும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 11 இலட்சத்து 50 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் முச்சக்கரவண்டிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com