தமிழ் සිංහල English
Breaking News

நல்லாட்சியில் நாங்கள் எங்கே இருக்கிறோம்?

ஏழு மாகாணங்களின் ஆளுநர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெவ்வேறு மாகாணங்களுக்கு மாற்றியுள்ளார். இது தொடர்பான பதவிப் பிரமாண வைபவமும் இன்று (12) நடைபெற்றது

இந்த நிலையில் முஸ்லிம் ஒருவரை ஏதோவொரு மாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதிக்கு நியமிக்கவும் வாய்ப்பிருந்தது. அதனை அவர் செய்யத் தவறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட இந்த விடயத்தில் தனது கரிசனையைக் காட்டவில்லை. ஆளுநர்களின் மாற்றங்கள் இவர்கள் இருவரதும் ஆலோசனையின் பின்னரே நடைபெற்றுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கியதன் பங்காளிகளாக முஸ்லிம்களும் உள்ளனர். அதேபோன்று அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது எமது சமூகத்தின் அரசியல் தலைமைகள் எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்காது வெளிப்படையாக அவரை ஆதரித்திருந்தது.

இவ்வாறனதொரு நிலையில், மைத்திரி –ரணில் என்ற இந்த நாட்டின் கூடடு அரசியல் தலைமைகள் எங்களது சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவர்களிடம் எதனையும் கேட்காதிருந்தாலும் அவர்களாகவே எமக்கு நல்லதைச் செய்து காட்டி எம்மைக் கௌரவித்திருக்க வேண்டுமல்லவா?

இன்னும் அவர்கள் முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் கறிக்கு உதவும் வேப்பிலையாகவே பார்க்கிறார்கள் என்பது கசப்பான விடயம்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியேறி மூன்று வருடங்களைக் கடந்துள்ள நிலையில் முஸ்லிம் மக்களுக்கு செய்துள்ள நல்ல காரியங்களைப் பட்டியலிட்டுக் காட்ட முடியாத திராணியற்ற நிலையிலேயே மைத்திரி- ரணில் உள்ளனர். முஸ்லிம்களின் இருப்பைப் பறிப்பதிலேயே இந்த நல்லாட்சி குறியாக உள்ளது.

முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக (மாவட்டச் செயலாளராக) நியமிக்கக் கூட தயக்கம் காட்டி வரும் இந்த அரசின் செயற்பாடுகள் தொடர்பில் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளை தங்களது கரிசனையைச் செலுத்த வேண்டும்.

எங்களுக்கான உரிமைகள்தான் இந்த நல்லாட்சியில் மறுக்கப்படும் நிலையில், எங்களுக்கான சலுகைகள் கூட பெறுவதற்கான தகுதி இல்லாத ஒரு சாக்கடைச் சமூகமாக இந்த அரசாங்கத்தினால் நாம் பார்க்கப்படுவது மிகக் கவலையான விடயம் மடடுமல்ல. ஒரு தீய சகுனமாகவே நோக்கலாம்.

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com