தமிழ் සිංහල English
Breaking News

ஹரீஸ் எம்பியின் அசிங்கமான அரசியல் .!

தங்களது தேர்தல் வெற்றிகளுக்காக, தமது வாய்களால் எமது சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி பகடைக்காய்களாய் ஆக்கிவிட்டு பின்னர் எடுத்தெறிந்துபேசி, வேதனைக்குட்படுத்திய பிரதி அமைச்சர் ஹரீஸினதும், Slmc தலைவர் ஹக்கீமினதும் நடிப்பினை எங்களில் எவரும் மறந்திருக்கமுடியாது.

இவர்களின் சகவாசமே வேண்டாம் என்றுதான் சுயேட்சைக் குழுவில், தோடம்பழச்சின்னத்தில் எமதூர்மக்கள் தேர்தல் களத்தில் இறங்கினார்கள். ஊரின் ஒற்றுமையில், உண்மையான உணர்விலும் நம்பிக்கைவைத்த எம்மவரும் தமது எதர்பார்ப்பு வெல்லவேண்டும் என்பதற்காக வாக்களித்து, ஏமாற்று வித்தைக்கார்ர்களுக்கு எதிர்ப்பையும் காட்டினார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த்தே.

எனினும், சிலரது துரோகத்தனத்தால், எமதூர் மக்களின் 2500 வாக்குகளைப் பெற்றுக்கொண்டாலும் உறுப்பினர் எவரும் தெரிவாகவுமில்லை. தேசியப்பட்டியலில் சில பெண்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

சகோதரி சட்டத்தரணி ஸபானா ஜுனைதீனின் பெயரும் போடப்பட்டிருந்த்தாக அறியமுடிந்தது.

ஆனாலும், தேர்தலில் 2500 வாக்குகள் அளித்து தேசியப்பட்டியலில் ஒரு பெண்ணிற்கு உறுப்பினராக வருவதற்கு வாய்ப்புகள் இருந்தபோது, அதற்கு மிகப் பொருத்தமானவராக சகோதரி ஸபானா இருந்தும் அவர்பெயரை நீக்கிவிட்டு, தனது மதினிக்கு உறுப்பபினர் நியமனத்தை வழங்கியுள்ளார் இந்தப் பிரதி அமைச்சர் ஹரீஸ்.

இதில் ஓர் விடயம் என்னவெனில், Slmc தலைவர் ஹக்கீம், தேர்தலின்போது சாய்ந்தமருது மக்களுக்குக்கொடுத்த “மேயர்” வாக்கினை, சகோ.ஸபானா மூலமாக நிறைவேற்றலாம் என்றிருந்த்தாகவும், இந்த ஹரீஸே இந்த விடயம் நிஜமாகிவிடும் என்பதற்காகவே குறித்த பட்டியல் உறுப்பினர் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்கியதாகவும் நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. பார்த்தீர்களா…இதுதான் ஹரீஸ் எம்பியின் அசிங்கமான அரசியல் அரங்கேற்றம்?!

இது இவ்வாறிருக்க, கல்முனையில் எங்கள் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த கல்வியலாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர், பேச்சாளர் அரசியல் பின்புலம் எனப் பன்முக ஆற்றல்களைக்கொண்ட சகோதரி ஜுல்பிகா ஷெரீப், ஒரு Journalism & Mass media Communication M.A பட்டதாரி. சட்டத்துறையிலும் 2வது வருடத்தைப் பூர்த்திசெய்தவர் எனத் தெரியவருகிறது. தேர்தலில் அவரை நிச்சயிக்கப்பட்ட உறுப்பினராகவே களமிறக்கினர்.கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்.

குறிப்பாக, பெண்களெல்லாம் தங்களது வாக்குகளை இவர்மீதுகொண்ட மரியாதையாலும், நம்பிக்கையாலுமே யானைச் சின்னத்திற்கு வாக்களித்தார்கள் என பலர்கூற நான் செவியேற்றேன்.இப்படிப்பட்ட ஒருவரின் பெயரை, இறுதிநேரத்தில் ஓடிவந்து நீக்கிவிட்டு தனது மச்சிக்கும், Slmcயோடு சம்பந்தமே யில்லாத இரு தமிழ்பெண்களுக்கும் எம்.பி ஹரீஸ் உறுப்பினர் நியமனத்தை பறித்துக்கொடுத்திருக்கிறார் என்ற உண்மை கல்முனை முஸ்லிம் மக்களால் மட்டுமல்ல, எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத்தொன்றாகும். அவர்களால் மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் மாட்டார்கள்.எமக்கும் மிகக் கவலையாக இருக்கிறது.

இதுதொடர்பாக எம்.பி யிடம் கேட்டால், “நான் அல்ல.தலைவர் முன்னிலையில் தயா கமகேதான் இவர்கள் பெயரை நீக்கினார்” என்று நாடகமாடுகிறாராம். சாதாரணமாக, தமிழ் பகுதியில் ஏனய கட்சி உறுப்பினர் ஒருவர் பெற்ற வாக்குகள் சுமார்1250அளவில். ஆனால் அங்கு ஐ.தே.கட்சிக்குக் கிடைத்த வாக்குகள், 1010 மட்டுமே! ஒரு உறுப்பினரைக்கூட வழங்கமுடியாது. இந்த இலெட்சணத்தில் கொடுத்திருக்கிறார்கள்.?!

தேர்தல் மேடைகளில் ஏனைய கட்சிகளுக்கு, தோடம்பழத்துக்கு எல்லாம்வாக்களித்தால், “தமிழர் வருவார்…” என்று மக்களைப் பயமுறுத்தி வாக்குப்பிச்சை கேட்டவர்கள், “தமிழ் தரப்பில் தேசியப்பட்டியலிலிருந்து ஒருவருக்கு மட்டுமே ஆசனம் வழங்குவோம் என்று ஒப்பந்தம் உள்ளது” என்றெல்லாம் உரக்கப் பூச்சாண்டி காட்டிய ஹரீஸ் குழுவினர், சுமார் 9500 வாக்குகளையளித்தும், கல்முனைக்குடியில் 5உறுப்பினர்கள் தெரிவாக்கியும், 12 ம் வட்டாரத்தில் 2000க்கு மேற்பட்ட வாக்குகளையும் அளித்த அந்த மக்களுக்கு, அதுவும், சகோதரி ஜுல்பிகாவுக்கு கிடைக்கவேண்டிய ஆசனத்தை நயவஞ்சகத்தனமாகத் தட்டிப்பறித்து, புவனேஸ்வரி என்றும், நந்தினி என்றும் வழங்கியிருக்கிறார்களே?! இந்தத் துரோகத்தனத்தை என்னவென்பது?! இன ஐக்கியம் என்பது எமது முஸ்லிம்களின் நியாயமான உரிமைகளை, தமது சுயநலங்களுக்காக மற்றவருக்கு, நம்மவரிடம் இருந்து பறித்துக்கொடுப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ளப்பாருங்கள்.

இன்னுமொரு கேள்வியும் எனக்குள் எழுகிறது…அதாவது, தேர்தலின்போது Slmc யின் தலைவர் ஹக்கீம், “தயாவின் மூக்கணாக்கயிறு, குடும்பி இவையெல்லாம் எனது கையில் இருக்கிறது.” என்றெல்லாம் தம்பட்டம் அடித்தாரே?! இப்போது எம்.பி சொல்கிறார் தயா வெட்டினாராம். இதைக் கூற வெட்கமில்லையா இவர்களுக்கு?இன்னும் எவ்வளவு காலங்களுக்கு இப்படி பொய்யையும், புரட்டையும் கூறி நடித்துத் திரியப்போகிறார்கள்?!

மக்கள் இப்போதெல்லாம் விழித்துக்கொண்டார்கள்.இனி இவர் பாடுகள் திண்டாட்டம்தான்.!
இந்த இரு ஆளுமைமிக்க சகோதரிகள்பற்றி Slmc தலைவர் ஹக்கீமுக்கு நன்கு தெரியுமே ?! அப்படியிருந்தும் இந்த எம்.பி ஹரீஸின் திருவிளையாடலுக்கு இடமளித்தது ஏன்? மக்கள் வினவுகிறார்கள்.

இவ்வாறான தில்லுமுல்லுகளுக்கும், துரோகத் தனங்களுக்கும் பெயர்போன Slmc கட்சியினர்,குறிப்பாக ஹரீஸ் எம்.பி,எதிர்வருகின்ற தேர்தல்களில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள தமது வாக்கு வங்கிகள் காலவதியாகி, காலியாகிவிட்ட காரணத்தினால், தமிழ்தரப்பினருக்கு இங்கிருந்து பறித்து, அங்குகொடுப்பதனால் சரிக்கட்டிக்கொள்ளலாம் என்று தப்புக் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார் என்று எண்ணவேண்டியுள்ளது.

ஆனால், அது நிச்சயமாக தப்புக் கணக்குதான் என்பதை அவர் புரிந்துகொள்வாராக ! பாதிக்கப்பட்டவரின் பாவம் என்ன பாடுபடுத்தப்போகிறது என்பதையும் உணர்ந்துகொள்வாராக. எதற்கும் இந்த ஆட்டங்கள் என்றோ அடங்கிப்போய்விடும்.பலரை இன்று காணவுமில்லை.ஆனால், இறை தண்டனை, தீர்ப்பு உரியவர்களைத் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதை எவரும் மறுக்கமுடியாது. மறக்கவும் வேண்டாம்.

( எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்…பாடல்வரிகள் நினைவுக்கு வருகிறது..)
(கீழேயுள்ள photo, அண்மையில் விழாவொன்றின்போது எடுக்கப்பட்டதாக எனது உறவுக்கார சகோதரியின் phone னிலிருந்து பெறப்பட்டது. சகோதரிகள் இருவரும் குறைநினைக்க வேண்டாம். )

—- Nizar Kariapper —-

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com