தமிழ் සිංහල English
Breaking News

மகளால் பெருமை அடைந்த நடிகர்,!

பிரபல மூத்த நடிகரான சத்யராஜ் பெரும்பாலான நடிகர்களைப் போல வயாதானவுடன் அப்பா, தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்லாமல் இளம் நாயகர்களைப் போல கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதன் பலனாக குணசித்திர வேடங்களில் பல விருதுகளையும் பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களின் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்று வருகிறார். சமீபத்தில் கூட உலகப் புகழ் பெற்ற நடிகர்களுக்கு மெழுகு சிலைகளை வைக்கும், லண்டனைச் சேர்ந்த அருங்காட்சியகத்திலும் இவரின் கட்டப்பா கதாபாத்திரத்திற்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது.

இப்படி சினிமாத்துறையில் ஒரு நடிகராக பல்வேறு பெருமைகளை பெற்றுவரும் நடிகர் சத்யராஜ். ஒரு தந்தையாக தன் மகளின் மூலம் பெருமை அடைந்திருக்கிறார்.

திவ்யா சத்யராஜ் சினிமா துறையில் இருந்து விலகி நியூட்ரியனிஸ்டாக பணி புரிந்து வருகிறார். இதனால் இவரை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சினிமா துறையில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் அதனை மறுத்துவிட்டு தான் செய்து கொண்டிருக்கும்  நியூட்ரியனிஸ்ட் பணியில் கவனம் செலுத்தி வரும் இவர், உலகப் புகழ் பெற்ற ‘அக்சய பாத்திரம்’ எனும் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.

கடந்த 2000மாவது ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதை சேவையாக செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சிறந்த செயலுக்காக முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பாரட்டுக்ககளையும் பெற்றிருந்தது.

இத்தைகைய கெளரவம் மிக்க நிறுவனத்தில் இவர் இணைத்திருப்பதை கேள்வி பட்ட சினிமா துறையினர் பலர் நடிகர் சத்யராஜிடம் அவரின் மகளை பாராட்டி வருகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com