தமிழ் සිංහල English
Breaking News

ரவி மீண்டும் அமைச்சராகிறார்!!

புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

தான் முன்னர் வகித்த நிதியமைச்சுப் பதவியையே மீண்டும் தனக்கு வழங்குமாறு ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ள போதும், அவருக்கு சுற்றுலா அபிவிருத்தி அல்லது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சுக்களில் ஒன்று வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

புதிய அமைச்சரவை இன்று வியாழன்அல்லது நாளை வெள்ளிக்கிழமை நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களை நியமித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com