தமிழ் සිංහල English
Breaking News

மலையகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வேலைத் திட்டங்கள்..!

பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 2 ஏக்கர் காணியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையானது மலையகத்தின் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதென, கல்வி இராஜாங்க அமைச்சரான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகளினது கல்வி செயற்பாடுகளுக்காக 843 பாடசாலைகள் இலங்கை முழுவதும் இயங்கி வருகின்றது.

இந்த பாடசாலைகளில் அநேகமான பாடசாலைகள் பெருந்தோட்டங்கள் நிர்வகித்து வந்தன. அவற்றை 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் கட்டம் கட்டமாக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு அவை தற்பொழுது அரசாங்கத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணி வழங்க வேண்டும் என்ற விடயம் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அது கடந்த காலங்களில் நடைமுறைபடுத்தப்படவில்லை.

இதனை கருத்தில் கொண்டு நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பின்பு இதற்கான முன்னெடுப்புகளை பல்வேறு மட்டத்திலும் மேற்கொண்டிருந்தேன்.

அதன் பயனாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதனை பெற்றுக் கொடுப்பதற்கு ஒத்தழைப்பு வழங்கிய அனைத்து அமைச்சர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இதற்காக கல்வி அமைச்சு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com