தமிழ் සිංහල English
Breaking News

கேப்பாபிலவு நில மீட்பு போராட்டம்:இன்றுடன் 409 நாட்கள்!

கேப்பாபிலவு நில மீட்பு போராட்டமானது இன்றுடன் 409 நாட்களாக தொடர்ந்து செல்கின்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களை முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சந்தித்திருந்தார்.

கேப்பாபிலவு கிராமத்தில் மொத்தமாக 171 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் மக்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்த போதும் 132 ஏக்கர்களை மட்டுமே மக்களிடம் ஒப்படைத்துள்ளனர் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாவை சேனாதிராஜாவிடம் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக, மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்…,

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமரிடம் எங்களுடைய பிரச்சனை தொடர்பாக பேசிய போது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நாங்கள் ஒன்றாக செயற்பட்டு தீர்வினை காண்பதாக எங்களிடம் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இனிவரும் நாடாளுமன்ற அமர்வில் எமது உறுப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதாகவும் குறிப்பாக கேப்பாபிலவு மக்கள் தொடர்ச்சியான இந்த போராட்டத்தை நடத்துவதையிட்டு மிகவும் கவலையடைகிறோம்.

இந்த மக்களின் பிரச்சனைகளுக்கு ஏற்கனவே உடன்பட்டவாறு தீர்வினை வழங்குமாறு பாராளுமன்றத்தில் வற்புறுத்துவோம் என தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட கரைத்துறைப்பற்று கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான 2500 ஏக்கர் வயற்காணிகள் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டு அப்பிரதேசத்தை சாராதவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

முழுமையாக சிங்கள குடியேற்றமாக மாற்றப்படும் நிலைமை காணப்பட்ட பொழுது நானும் ஆர்.சம்பந்தனும் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் குடியேற்றங்கள் இடம்பெறுமானால் அது அங்குள்ள தமிழ் மக்களுக்களை குடியேற்றப்படல் வேண்டும் எனவும் மகாவலி திட்டம் அப்பிரதேசத்திற்கு வழங்குவதை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால், தமிழ் மக்கள் அல்லாத எவரையும் அந்த பிரதேசத்தில் குடியேற்றுவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் இதற்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com