தமிழ் සිංහල English
Breaking News

தெற்காசியாவின் சுகநலப்பாதுகாப்பு தொடர்பான 7வது மாநாடு.!

தெற்காசியாவின் சுகநலப்பாதுகாப்பு தொடர்பான 7வது மாநாடு இஸ்லாமாபாத்தில் ஆரம்பம் – ரவூப் ஹக்கீம் தலைமையில் உயர்மட்டக் குழு பங்கேற்பு

சகோசான் ( SACOSAN ) vii எனப்படும் தெற்காசியாவின் சுகநலப்பாதுகாப்பு தொடர்பான 7வது மாநாடு இம்மாதம் இன்று 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானின் காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சு இந்த 7வது மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றது. சார்க் பிராந்திய நாடுகளின் அரசாங்க அதிகாரிகள், நன்கொடை உதவியாளர்கள், அபிவிருத்திக்கான உதவி நிறுவனங்கள், சிவில் சங்கங்கள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆய்வாளர்கள், கல்விமான்கள்; பாடசாலைகள் மற்றும் சுகநல பாதுகாப்புத் துறைசார்ந்த செயல்பாட்டாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டுக்கான அரச தூதுக்குழுவினர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (11) இஸ்லாமாபாத் செல்லவுள்ளனர்.

தெற்காசிய சுகநலப் பாதுகாப்பு மாநாடானது சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளது அரசாங்கங்களினால் ஏற்பாடு செய்யப்படுவதுடன் இதன் மூலம் சுகநலப்பாதுகாப்புத் துறை நடவடிக்ககைகள் தொடர்பான அறிவையும் அனுபவங்களையும் உருப்பு நாடுகள் மத்தியில் பரிமாறிக் கொள்ளும் நோக்கிலே இடம்பெறுகின்றன. மேலும் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப இத்துறையின் செயற்பாடுகள் நெறிப்படுத்தப்படுவதுடன், அதற்கான அரசியல் பலமும் கிடைக்கப் பெறுகின்றன.

தெற்காசியாவில் சுகநலப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானதும் சவாலுக்குறியதுமான ஒரு சமூக செயற்பாடாகவும் விளங்குகின்றது.

உலக சனத்தொகையில் 1/3 பகுதியினருக்கு முறையான சுகநலப்பாதுகாப்பு வசதிகள் இல்லாமலிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவில் திறந்த வெளிகளில் மலங்கழிப்போர் தொகை 700 மில்லியனுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றன.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவானது எதிர்வரும் 10ம் திகதி முதல் 14ம் திகதி வரை இஸ்லாமாபாத்தில் நடைபெறும் மாநாட்டில் இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளவுள்ளார்.

இந்தத் தூதுக்குழுவில் துறைசார்ந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்ட அதிகாரிகள் செயற்பட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்விமான்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் உள்ளடங்குவர்.

இலங்கையின் இத்துறையில் நிபுனத்துவம் பெற்றவர்களால் எதிர்காலத்தில் தேவைகளை அமுல்நடத்துவதற்குத் தேவையான நிதித்தேவைகள் தொடர்பாக மாநாட்டின் போது விளக்கமளிக்கவுள்ளனர். இது தொடர்பான அமர்வுக்கு அமைச்சர் ஹக்கீம் தலைமை தாங்க இருப்பதோடு நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான 4 ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.

நிலைபேறான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுகநலப்பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்நடத்தலுக்கான நிதி ஒதுக்கீட்டில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படவுள்ளன.

ஏப்ரல் மாதம் 10ம் 11ம் 12ம் திகதிகளில் இடம்பெறும் கருத்துப் பரிமாறல்களுக்கேற்ப எட்டப்படும் தீர்மானங்கள் அடங்கிய இஸ்லாமாபாத் பிரகடன வெளியீடு 14ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டின் போது எடுக்கப்படும் தீர்மானங்களை செயற்படுத்துவது தொடர்பாக அங்கத்துவ நாடுகள் மிகவும் அக்கறையுடன் காணப்படுகின்றன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com