தமிழ் සිංහල English
Breaking News

ஜூன்-க்கு தள்ளிப்போன காலா..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இரண்டாவது படம் காலா. மும்பை தாராவியில் வாழும் தமிழராக ரஜினி நடித்திருக்கிறார். ஹிந்தி நடிகை ஹூமா குரேசி, நானா படேகர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 27-ந் தேதி படத்தை வெளியிட அறிந்தனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக தமிழ்த்திரை உலகில் நடந்து வரும் ஸ்டிரைக் காரணமாக காலா ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. தற்போதைய சூழலில் படத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது. காலாவிற்கு முன்பே திரைக்கு வரவேண்டிய பல படங்கள் வரிசைகட்டி நிற்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com