தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஆர்டர் ஆப் தி லயன் விருது..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாட்கள் பயணமாக மனைவியுடன் ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலில் எக்குவடோரியல் கினியாவுக்கு சென்றார். அங்கிருந்து புறப்பட்டு சுவாசிலாந்து விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, அந்நாட்டின் பிரதமர் பார்பனோஸ் சிபுசிசோ டிலாமினி அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

அதன்பின் சுவாசிலாந்து மன்னர் மூன்றாம் முசுவாதியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சுவாசிலாந்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி லயன் விருது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com