தமிழ் සිංහල English
Breaking News

வீரர்களை செருப்பால் அடித்த ரசிகர்கள்..!

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியின் போது வீரர்களின் மீது செருப்புகளை எரிந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடும் போது, களத்தடுப்பில் ஈடுபட்ட ஜடேஜாவை குறிவைத்து ரசிகர்களில் ஒருவர் செருப்பொன்றை எரிந்துள்ளார்.

அத்துடன் மேலதிக வீரராக செயற்பட்ட தென்னாபிரிக்க அணியின் டு பிளசிஸ் மீதும் இவ்வாறு செருப்பு எரியப்பட்டுள்ளமை தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – கர்நாடகா மாநிலங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள காவரி நதிநீர் பிரச்சினை காரணமாக ஐ.பி.எல். தொடரை சென்னையில் நடத்தக்கூடாது என தமிழகத்தின் பல அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com