தமிழ் සිංහල English
Breaking News

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!

முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவுக்கு இன்று (10) விஜயம் செய்த வடமாகாண சபையின் உறுப்பினர்கள், அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், சட்டவிரோத விகாரை அமைக்கும் பணி, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் மாவட்டச் செயலரிடம் கையளித்துள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com