தமிழ் සිංහල English
Breaking News

வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கைது..!

மட்டக்களப்பு – கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ந.கோணலிங்கம் வாகரை பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வாகரை பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாகத் தேடப்பட்டுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாகரை பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவராவார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு தினங்களுக்கு முன்னர் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com