தமிழ் සිංහල English
Breaking News

மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட முயற்சிக்கும் கூகுள்..!

பிரபல சீன வலைத்தளமொன்றில் வெளியாகியுள்ள தகவல்களின் படி கூகுள்நிறுவனம் மூன்று பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் டிசையர் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு கோ இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக கூகுள் நிறுவனம் ஹெச்டிசி ஸ்மார்ட்போன் பொறியியல் குழுவினை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்டிசி நிறுவன மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் டிசையர் பிரான்டிங் கொண்டிருந்தன. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆன்ட்ராய்டு ப்ரியர்களுக்கு இது நற்செய்தியாக இருக்கும். முந்தைய நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் உயர் ரக சிறப்பம்சங்கள், ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் குறைந்த விலை கொண்டிருந்தது.

இதுதவிர கூகுள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களின் பெயரை தெரியாமல் வெளியிட்டுவிட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் XDA டெவலப்பர்கள் வழங்கியிருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் செர்ரிபிக் என அழைக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com