தமிழ் සිංහල English
Breaking News

ஆறுமுகன் தொண்டமான்-சீ.வி.விக்னேஸ்வரன் இடையில் சந்திப்பு..!

யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, உள்ளூராட்சி சபை தேர்தலின் போது, நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் வெற்றி தொடர்பிலும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, மத்திய, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான மருதபாண்டி ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com