தமிழ் සිංහල English
Breaking News

திரையை தொடாமலே கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்..!

சர்வதேச ரீதியில் தனக்கென ஒரு தன்னிகரில்லா இடத்தை பிடித்து வைத்திருக்கும் ஒரு சில நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. தொழில்நுட்பத்தின் தரத்தை நன்கு உணர்ந்து தனது தயாரிப்பை திறம்பட மேற்கொண்டு வெளியிடுவது ஆப்பிளுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

இந்நிலையில் வளைவான செல்போன் திரைகளுக்கு அருகே விரல்களை கொண்டு சென்றாலே செயல்படத்தக்க வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது.

Image result for Apple-reportedly-working-on-an-iPhone-with-touchless-gesture-control

துவக்க கால ஆய்விலிருக்கும் இந்த தொழில்நுட்பத்தை சந்தைக்கு கொண்டு வர இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என கருதப்படுகிறது.

ஸ்மார்ட் போன்கள் சந்தையில் நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில் தனது தனித்தன்மையை நிலை நிறுத்தும் விதமான முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வளைவான அமைப்பைக் கொண்டிருக்கும் செல்போன் திரைகளை தொடுவதற்கு பதிலாக விரல்களை அருகே கொண்டு சென்று சில அசைவுகளை செய்வதன் மூலம் அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com