தமிழ் සිංහල English
Breaking News

அம்பாறை மாணவனின் செயல்! நெகிழ்ச்சியில் பொலிஸார்

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் மாணவர் ஒருவர் வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலிஸாரைத் தேடிச்சென்று ஒப்படைத்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த மாணவன் வீதியில் கிடந்த பணப் பொதி ஒன்றினை எடுத்து வீதிக்கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

திருக்கோவில் தம்பிலுவில் தேசிய பாடசாலையில், தரம் 8இல் கல்வி கற்கும் ஹயானன் என்ற சிறுவனே குறித்த பொதியினை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாணவன் கண்டெடுத்த பொதியில், ஒரு இலட்சம் ரூபா பணம், வங்கிப்புத்தகம் மற்றும் அடையாள அட்டை என்பன காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பணப் பொதியை உரியவர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்ததோடு, இந்த மாணவனை போல அனைவரும் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என தெரிவித்து, மாணவனையும் பாராட்டியுள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com