தமிழ் සිංහල English
Breaking News

கோஹ்லி,மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கைக்கு வர வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் அழைப்பு!

இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கைக்கு வர வேண்டும் என, இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சரான தயாஸ்ரீ ஜெய்சேகரா, இந்திய வீரர் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகர் ஆவார். இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, கோஹ்லியின் ஆட்டத்தை காண்பதற்காகவே இந்தியா வந்தவர் ஜெய்சேகரா.

இந்நிலையில் விராட் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கைக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தயாஸ்ரீ ஜெய்சேகரா.

இது குறித்து ஜெய்சேகரா கூறுகையில், ‘விராட் கோஹ்லியை விளையாடுவதற்காக இலங்கைக்கு அழைக்கவில்லை. அவர் தனது மனைவியுடன் இலங்கையில் சில நாட்கள் செலவழிக்க வேண்டும்.

திருமணத்திற்கு பிறகு அவர் இலங்கைக்கு வரவில்லை. இப்போது எங்கள் நாட்டு விருந்தினராக அவர் வரவேண்டும். எங்கள் நாட்டில் பார்ப்பதற்கு சில நல்ல சுற்றுலா தளங்கள் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com