தமிழ் සිංහල English
Breaking News

‘எல்லாம் நீயே!’

எல்லாம் நீயே!| என்ற புத்தகமானது மௌலானா மௌலவி அல்-ஹாஜ் ஏ. றபீயுத்தீன் ஜமாலி அவர்களின் புதிய வரவாகும். பன்னூலாசிரியர் ஜமாலி அவர்கள் ஏலவே பல புத்தகங்கள் எழுதி ஆத்மீக வழியில் தடம் பதித்துள்ளார்கள்.

இப்புத்தகம் இஸ்லாத்தின் மூலமத்திரமான ஷஷலா இலாஹ இல்ல ல்லாஹ்|| என்பதற்கான அர்த்த புஷ்ட்டியான விளக்க நூலாகும்.

இன்று சடவாதப் போக்குள்ள முஸ்லிம்கள் ஆத்மீகத்திற்கு விரோதமாக அல்லாஹ்வின் ஏகத்துவத்தை மறுப்பதோடு தாங்கள்தான் உண்மையான முஸ்லிம்கள் என்ற குருட்டு நம்பிக்கையோடு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் யாரும் முஸ்லிம்களாக ஏற்கப்படமாட்டார்கள்.

சடவாதம் ஒரு போதும் ஆத்மீகமாகாது. கலிமாவுக்கு வணகத்திற்குப் பத்திரமானவன்தான் அல்லாஹ் என்று அல்லாஹ்வை குறுகிய வட்டத்திற்குள் யாரும் கட்டி வைக்கக்கூடாது. அவ்வாறானால் காற்றுக்குப் பாத்திரமானவன் யார்? நெருப்புக்குப் பாத்திரமானவன் யார்? மழைக்குப் பாத்திரமானவன் யார்? இப்படி அனேகமான கேள்விகளுக்கு பதில் இல்லாத கலிமாவில் என்ன ஏகத்துவம் இருக்கப் போகின்றது? இது சடவாதிகளின் முட்டாள்தனமான ஏகத்துவ விரோதக்கருத்தாகும். இது இஸ்லாமும் அல்ல. இவ்வாறு நம்பிவர்கள் முஸலிம்களுமல்ல.

இது தொடர்பாக கலிமாவுக்கு தெளிவான விளக்கத்தை எல்லாம் நீயே!| என்ற புத்தகத்தில் றபீயுத்தீன் ஜமாலி அவர்கள் ஆணித்தரமாக நிறுவியுள்ளார்கள். ஆகவே, இப்புத்தகத்தை வாங்கிப் படித்து தெளிவு பெறுமாறு அன்பாக அனைவரையும் வேண்டுகிறோம்.

முஹம்மட் முபீஸ்
அக்கரைப்பற்று.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com