தமிழ் සිංහල English
Breaking News

இலங்கையின் பதற்ற நிலை தொடர்பில் மஹல மற்றும் சங்ககார அவசர அறிவிப்பு

மீண்டும் நாட்டில் ஓர் சிவில் யுத்தம் ஏற்படுவதனை விரும்பவில்லை என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் மஹல ஜயவர்தன பதிவிட்ட டுவிட்டரில் பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ள அவர் தாம் வளர்ந்த 25 ஆண்டுகளாக சிவில் யுத்தம் நாட்டில் நீடித்தது எனவும், அடுத்த தலைமுறையினரையும் சிவில் யுத்தம் பாதிக்கக் கூடாது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

வன்முறைகளில் ஈடுபட்ட அனைவரும் தராதரம் பாராது நீதியின் முன் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனவும் மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மக்களிடம் குமார் சங்ககார விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைக்குள் எவரும் மத மற்றும் இனம் காரணமாக அச்சுறுத்தலுக்கோ, பிரச்சினைகளுக்கோ ஆளாகக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு நாடு மற்றும் ஒரே இனம் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் நடக்கும் இனவாத வன்முறைகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அன்பு, நம்பிக்கை மற்றும் அரவணைப்பு இலங்கையின் பொது பயன்படாக இருக்க வேண்டும். இனவாதம் மற்றும் வன்முறைகளுக்கு இடம் கிடையாது. வன்முறைகளை கைவிட்டு அனைவரும் வலுவாக ஒன்றிணைய வேண்டும் எனவும் சங்ககார கோரியுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com