தமிழ் සිංහල English
Breaking News

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்- சுமந்திரன்

காணாமல்போனோர் அலுவலகத்திற்கான ஆணையாளர் நியமனம், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணாமல்போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”நீண்ட தாமதத்துக்குப் பின்னர் காணாமல் போனோர் பணியகத்துக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை வரவேற்கின்றோம். ஆனால் இந்த நியமனங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

நீண்ட இழுபறியால் மக்களுக்கு இதன் மீதான நம்பிக்கை தகர்ந்து விட்டது. மக்கள் நம்பிக்கை இழந்த பின்னர் இந்தப் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர், உறுப்பினர்கள் சுதந்திரமானவர்கள். அவர்கள் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். அவர்கள் அரசின் அங்கம் அல்ல. ஆணையாளர்கள் துரிதமாக அலுவலகத்தைச் செயற்படுத்த வேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அலுவலகத்தை ஆரம்பிக்க வேண்டும். விசாரணைக்குத் தேவையான வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com