தமிழ் සිංහල English
Breaking News

சிறுவர்களை வைத்து கிளர்ச்சியாளர்கள் பேரம் பேசலாம் – ஐ.நா எச்சரிக்கை…!!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் இருக்கும் சிறுவர்களை வைத்து பேரம் பேசுவதற்கு கிளர்ச்சியாளர்கள் முற்படக்கூடும் என ஐ.நா எச்சரிக்கைவிடுத்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் கௌடா நகரிலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றிவரும் நிலையில், குறித்த பகுதியில் அதிக சிறுவர்கள் வெளியேற்படுவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சிறுவர்களை வைத்து கிளர்ச்சியாளர்கள் பேரம் பேசலாம் - ஐ.நா எச்சரிக்கை

இதேவேளை, சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றமையினால், அவர்களை வைத்து கிளர்ச்சியாளர்கள் பேரம் பேசக் கூடும் என ஐ.நா அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிரியாவுக்கான ஐ.நாவின் சிறப்பு தூதுவர், சிறுவர்களுக்கு பதிலாக கிளர்ச்சியாளர்கள் அரசாங்க ஊழியர்களை வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் தான் கிளர்ச்சியாளர்களின் நோக்கத்தை அறிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கௌடா பகுதியிலுள்ள உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று முதல் செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று 12 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இன்று சுமார் 13 பேர் வரை வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் நகரங்களை மீட்டெடுக்கும் பொருட்டு, சிரிய இராணுவத்திற்கு அதரவாக ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு இடம்பெற்று வரும் தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தும் இடம்பெயர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com