தமிழ் සිංහල English
Breaking News

பாதாள உலகக்குழு தலைவர்களை காப்பற்ற முயற்சிக்கும் முக்கிய அமைச்சர்கள்….!!

கொலை, கொள்ளை மற்றும் கப்பம் பெற்றமை உட்பட மிகப்பெரிய பல குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு பாதாள உலகக்குழு தலைவர்களை காப்பற்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு முக்கிய அமைச்சர்கள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாருக்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேலியகொடை பிரதேசத்தை தளமாக கொண்டு இயங்கும் இந்த பாதாள உலகக்குழு தலைவர்கள் மேற்கூறிய அமைச்சர்களின் அரசியல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாதாள உலகக்குழு தலைவர்களை கைது செய்ய பொலிஸாருக்கும் அதிரடிப்படையினரும் நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர் கடும் கோபத்திற்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர்கள் அவர்களை காப்பாற்ற கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர்கள் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் சிலருடன் தொடர்புக்கொண்டு பேசியுள்ளதுடன் கைது செய்யப்பட உள்ள பாதாள உலக குழு தலைவர்கள் அப்பாவியான இளைஞர்கள் எனக் கூறியுள்ளனர்.

இவர்கள் தம்முடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேவையேற்பட்டால் பொலிஸாரிடம் நேர்நிலைப்படுத்துவதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட உள்ள இந்த பாதாள உலகக்குழு தலைவர்கள் கடந்த காலத்தில் மேல் மாகாணத்தில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் கப்பம் பெற்றமை உட்பட பல குற்றங்களுக்காக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com