தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் தற்சமயம் அவரச பேச்சு .!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் தற்சமயம் அவரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் இன்று வரையில் தொடர்ந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்றும், இன்றும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

எனினும், சபையில் ஏறப்பட்ட குழப்பங்கள் காரணமாக குறிப்பாக இன்றைய தினம் நாடாளுமன்றில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில், சபாநாயகர் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com