தமிழ் සිංහල English
Breaking News

கஃபாவின் ரட்சகனே!

கஃபாவின் ரட்சகனே!

மனிதர்களின் இதயங்களில் ஒழிந்திருப்பவற்றை நீயே மிக அறிந்தவன்!

கஃபாவே !

உன் திரைச்சீலையை விலக்கியேனும்
உன்னுள் இருப்பதை நாம் கண்டு கொண்டோம்.

மனிதர்களின் முத்திரை இடப்பட்ட இதயங்களை
நீ எமக்கு திரை நீக்கிக் காட்டுவாயாக!

கபடநாடக சூத்திரங்களின் சூக்குமங்களை
நீ அம்பலப்படுத்துவாயாக!

அப்ரகாவின் யானைப்படையின் ரகசியம்
அறிந்த றப்பே ரஹ்மானே!

உம்றாவை கடமை ஆக்கியவனே!

எங்களை தலைக்கு விலை பேசி
யாரேனும் விற்கத் துணிந்து விட்டால்
உன் ஸிஜ்ஜீல் படை கொண்டே அவர்களை சின்னாபின்னப்படுத்துவாயாக!

மந்திரமும் தந்திரமும் மிகைத்து விட்ட நாட்கள் இவை..
ஆபத்தில் மாத்திரமே ஆன்மீகம் நாடுகின்றார்…

சந்தர்ப்பம் வரும்போது தள்ளாடும் சத்தியமும் ;

சாஷ்டாங்கம் மிகைக்கின்ற பொல்லாத சாணக்கியமும் ,

மஹ்ஷரிலும் நம் கண் முன்னே வந்து நிற்கும்….

இஹ்ராம் ஆடைகள் வந்து சொல்லட்டும் சாட்சி…

Image may contain: one or more people

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com