தமிழ் සිංහල English
Breaking News

பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்ளும் சபாநாயகர்.!

பாராளுமன்றத்தின் அனைத்து நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பை மீறியே சபாநாயகர் செயற்படுகிறார். அதனால் அவரின் இந்நடவடிக்கை மீண்டும் 83போன்ற கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடினால் இருந்த பிரதமரையே பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஜனாதிபதியின் உரை மாத்திரமே இடம்பெறும். அதனை மீறி எதுவும் இடம்பெறமுடியாது. அவ்வாறு எதனையாவது செய்ய முயற்சித்தால் வீண் பிரச்சினையே ஏற்படும்.

இந்நிலையில், அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. அத்துடன் கட்சி ஆதரவாளர்களும் பிரச்சினைப்படும் பட்சத்தில் கிராமங்களிலும் பாரிய சண்டைச்சரவிலேயே இது முடிவடையும். அதனால் சபாநாயகர் இந்த நிலை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com