தமிழ் සිංහල English
Breaking News

மகிந்த – மைத்திரியிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க மக்கா பயணமான றிசாத், ஹக்கீம் .!

புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் 4 பேரும் ,   கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனித மக்காவுக்கு சென்றனர்.

கடந்த காலங்களில் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் மார்க்க கடமைகளுக்காக சென்றது இல்லை.

இப்படி இருக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மகிந்த பக்கம் யாரும் தனது கட்சி உறுப்பினர்கள் ஓடி விடுவார்கள் என்ற அச்சத்திலும் மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் வருவதாக கூறிய சூழலில் நேற்று முன்தினம் யாரும் செல்லமாட்டார்கள் என ஹக்கீம் கூறியிருந்தார்.

இப்படி பலரும் பயங் காட்டிய நிலையில் , வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை காப்பாற்ற ஒரே வழி மார்க்கத்தை காட்டி விமானம் மூலம் எல்லோரையும் ரணிலின் ஆலோசனைப்படி ஏற்றி விட்டார் ஹக்கீம்.

இவர்களுக்கு சிங்கப்பூரில் இருந்து பணங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது .

சில வேளை மக்காவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் றிசாத், ஹக்கீம் சத்தியம் வாங்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரணம் குர்ஆனில் மக்காவில் சத்தியம் செய்து பின்னர் அதனை மீறினால் மார்க்கத்தின் படி மகா பாவமாக கருதப்படுகிறது.

கல்முனை ஹரீஸ்  எம்.பி மக்கா செல்வதற்கு முன் பிரதியமைச்சர் மஸ்தானை தனது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது  .

ஒட்டு மொத்தத்தில் மகிந்த – மைத்திரியிடம் இருந்து தப்புவதற்கு பாதுகாப்பான இடம் புனித மக்கா என்பதை உணர்ந்த றிசாத் , ஹக்கீம் இந்த முடிவை எடுத்துள்ளதாக இவ்விரு கட்சிகளின் அதி உயர் பீடத்தின் பெயர் குறிப்பிடாத உறுப்பினர்கள்  குறிப்பிட்டார்கள் .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com