தமிழ் සිංහල English
Breaking News

தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘கண்ணாடி’.!

மதுர வீரன்’ படத்தை தயாரித்த ‘வி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் அமலாபால் நடிப்பில் ‘ஆடை’ எனும் படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியது. இதனை அடுத்து இந்நிறுவனம் ‘ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் ‘உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘கண்ணாடி’ எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார்.

மேலும் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு தமன் இசை அமைக்க, வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ஓ.ஃ.பிரவின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, விதேஷ் கலையமைக்கிறார். ‘ஸ்டன்னர்’ சாம் சண்டைக் காட்சிகளை அமைக்க ஷெரிஃப் நடனக்காட்சிகளை அமைத்துள்ளார்.

‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்க்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி வருகிறார்.  இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறுகையில், ஹாரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்துசெல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளோம். ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருவதாககூறினார்.

வேகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளிவரவிருக்கிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com