தமிழ் සිංහල English
Breaking News

267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் .!

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஜார்க் வொர்க்கர், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வொர்க்கர் 1 ரன்னிலும், கொலின் முன்றோ 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 27 ரன்கள் எடுத்த நிலையில் சதாப் கான் பந்தில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து 78 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர் உடன் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

நியூசிலாந்து அணி 41.2 ஓவரில் 208 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டாம் லாதம் 64 பந்தில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் நிக்கோல்ஸ் (0), கொலின் டி கிராண்ட்ஹோம் (0) ஆகியோரை சதாப் கான் வீழ்த்தினார். அடுத்த ஒவரில் ராஸ் டெய்லர் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனால் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து 210 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த டிம் சவுத்தி (20), இஷ் சோதி (24) ரன்கள் அடிக்க நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com