தமிழ் සිංහල English
Breaking News

ரணிலின் ஜனநாயகத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் .! றிசாத், ஹக்கீம் அறிக்கை .!

ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைக்கப்பட்ட அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் அழைப்பின் பேரிலேயே, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கலிளிருந்து தெரிய வந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் என்ற வகையில், தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு தம்மால் ஒருபோதும் ஆதரவு வழங்க முடியாதென தெரிவித்து, ஜனாதிபதியின் கோரிக்கையை கட்சித் தலைவர்கள் இருவரும் நிராகரித்துள்ளனர்.

உங்கள் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிடினும் நான் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதாக, தலைவர்களான ஹக்கீம் மற்றும் ரிஷாட்டிடம் மிரட்டும் பாணியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் உங்களுக்கு அவ்வாறான அதிகாரங்கள் கிடையாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து “மக்களின் கருத்துக்களை கேட்டது தவறா” என ஜானதிபதி சிரித்துக்கொண்டே நக்கலாகக் கேட்டுள்ளார்.

மக்களின் கருத்துக்களைக் கேட்பது தவறல்ல. ஆனால், அது அரசியலமைப்புக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டமையே பிழையானது என அவர்கள் சுடிக்காட்டியுள்ளனர். இதேபோன்று 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், பாராளுமன்றத்தின் கால எல்லை நிறைவடைய 06 மாதங்கள் உள்ள நிலையிலே அன்றி, பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு முடியாதென தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் எனவும், இவ்வாறே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நட்பு ரீதியான சந்திப்பொன்றை மேற்கொள்வதற்காகவே நான் உங்களை அழைத்தேன் என ஜனாதிபதி கட்சித் தலைவர்களிடம் தெரிவுத்துள்ளார். ஜானதிபதியின் கோரிக்கைகளை கட்சித் தலைவர்களான ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் நிராகரித்ததை அடுத்து, அரசின் முக்கியஸ்தர்கள் சிலர், இவர்கள் இருவரும் ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடியாதாக போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளதை அடுத்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த விடயம் குறித்து விஷேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com