தமிழ் සිංහල English
Breaking News

ஒரு வாக்கின் மதிப்பு ரூபாயின் மதிப்பு குறைவதைப் போல குறைந்து கொண்டே போகிறது .!

 ராஜ் கொன்சல்கோரளே

பாரதிய ஜனதா கட்சியின்(பி.ஜே.பி) சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீலங்காவின் தமிழ் சமூகம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) தலைவரான ஆர். சம்பந்தனைப் போன்ற மதிப்புக்குரிய மூத்த தமிழ் தலைவர்கள், தமிழர்களின் பிரச்சினைகளின் பொருட்டு பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஸவுடன் ஒரு வேலைத்திட்டத்தை ஒழுங்கு செய்ய முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் –

குதிரை பேரத்துக்கான காலம் இது. சிலர் சொல்லும்; அரசியலமைப்பு வTamil-politicsிவகார நெருக்கடி, இதற்காக பல வழிகளைத் திறந்துவிட்டுள்ளது. சில அவநம்பிக்கையாளர் சொல்லுவது, அதிகம் எரிச்சலூட்டும் விதத்தில் அல்ல, ஒருவர் பணக்காரனாக ஓய்வு பெற்று நல்லதொரு வாழ்க்கையை அமைக்க வேண்டுமாயின் இது தான் ஒரு பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கவேண்டிய தருணம் என்று. ஒரு வாக்கின் மதிப்பு ரூபாயின் மதிப்பு குறைவதைப் போல குறைந்து கொண்டே போவதாக எங்களுக்குத் தெரிவிக்கிறது.

கொள்கைகள், மதிப்புகள், மரபுகள் மற்றும் பழைய தலைமுறையினர் புனிதமாக கருதப்படுபவைகள் என்று வரலாற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளவற்றை  இன்றைய இளைய தலைமுறையினர் அதிகாரம் உள்ளதும் அதனுடன் வழிபாட்டுக்குரிய சிலைகளாக பணமும் இருக்கும் புதிய உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த கொந்தளிப்பான அரசியல் மற்றும் கலாச்சார சூழ்நிலையில், தமிழ் அரசியல் கட்சியினரும் மற்றும் சில தமிழ் அரசியல்வாதிகளும் தங்கள் வாக்குகளுக்காக கோரிக்கை விடுவனவற்றைப் பற்றி ஆய்வு செய்வது மதிப்புள்ளதாக இருக்கும். ஓரவஞ்சனையாக தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் அதிகாரம் தொடர்பான அரசியல் கருத்துக்களை தக்கவைத்திருப்பதற்காக, சில அரசியல் கட்சிகளின் கருவூலங்களுக்கும் மற்றும் சில தனிப்பட்டவர்களின் பைகளுக்கும் பணத்தை வாரியிறைத்துள்ளார்கள் என்றொரு வதந்தி உலாவகிறது.

அது அப்படியிருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அநேகமான சிங்களவர்களுக்கு, அரசியல் ரீதியாக தமிழர்கள் யார் என்பதிலும் மற்றும் ஏன் எல்லாத் தமிழர்களும் ஒரேமாதிரியான அடிப்படையான அரசியல் உரிமைகளைக் கோருவதைப் போலத் தெரியவில்லையே என்பதிலும் அப்படி அவர்கள் கோருவதானால் ஏன் ஒரு ஒற்றைத் தமிழ் சமூகமாக அதைச் செய்வதில்லை என்பதிலும் சில குழப்பங்கள் உள்ளன.

சிங்களவர்களுக்குள்ளும் அவர்களின் சொந்தப் பிளவுகள் உள்ளன, ஆனால் அவை முக்கியமாக ஜாதி அடிப்படையிலானவை, மற்றும் இது கூட காலப்போக்கில் அரசியலில் பொருத்தமற்றதாகவும் மற்றும் முக்கியத்துவம் குறைந்ததாகவும் மாறியுள்ளன. கண்டிய சிங்களவர்கள் மற்றும் கீழ் நாட்டு சிங்களவர்கள் சில காலகட்டத்தில் சிலவற்றில் முக்கியமாக இரண்டு பிரிவுகளாக இருந்தார்கள், ஆனால் இது கூட அரசியல் முக்கியத்துவத்தில் மங்கிப்போனது.

அரசியல் ரீதியாக அநேகமாக மதத்தை அடிப்படையாக் கொண்ட பிளவுதான் சாதி அல்லது பிராந்தியம் ; சார்பான பிளவைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, இருந்தாலும் மதம் சார்பான பிரிவுகள் நாட்டின் சில பகுதிகளில மட்டுமே மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சில அர்த்தத்தில் அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது தமிழ் சமூகத்தில் சிங்கள சமூகத்தைக் காட்டிலும் சமத்துவமற்ற தன்மை அதிகளவில் காணப்படுவதாக ஒருவரால் வாதிட முடியும்.

சாதி ரீதியான பிளவுகள் தமிழ் சமூகத்தில் பெரியதொரு அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றன, அதேபோல பிராந்திய சார்புகளும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. estate tamilவட பகுதி தமிழர்கள் அடங்கிய தமிழ் சமூகம் ஒழங்குமுறையில் கிழக்குத் தமிழர்களை தங்களுக்கு அடுத்த நிலையிலேயே கணிக்கிறது, மற்றும் சமீபத்தைய இந்திய வம்சாவழி தமிழர்கள், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் கண்ணோட்டத்தில் ஒழுங்கமைப்பில் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார்கள். எந்தவொரு வடக்கு அல்லது கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் தலைவரும் பிரதானமாக தோட்டப்பகுதிகளில் வசித்துவரும் இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவளிக்கவும் மற்றும் பிரச்சாரம் செய்யவும் பெரும்பாலும் முன்வந்ததில்லை. வடக்கு கிழக்கைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தோட்டப்பகுதிகளக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் நிலையைப் பார்வையிட்டதாகப் பதிவுகள் எதுவும் இல்லை. வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப் பகுதிகளைத் தவிர நாட்டின் இதர பகுதிகளில் வாழும் தமிழர்கள், தமிழ் சமூகத்தின் இந்தப் பகுதிகள் அனைத்தினதும் கலவையாகும். புள்ளியியல் ரீதியாக அதிகமான தமிழர்கள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே வாழுகிறார்கள்.

இந்த சனப்பரம்பல் மற்றும் மானுடவியல் ரீதியான நிலப்பரப்பில், சிங்களவர்கள் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை எப்படிப் பார்ப்பது மற்றும் அவைகளைப்பற்றி எப்படி உரையாடுவது என்பது பற்றிய ஒரு குழப்பநிலையில் உள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை அநேகமாக தமிழ் சமூகம் கூட கோரிக்கைகளை வேறுபடுத்துகிறது.

வடக்கு மற்றும் கிழக்கை அடிப்படையாகக் கொண்ட அவர்கள் கோரிக்கை அது வரலாற்று ரீதியான தமிழர் தாயகம் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மானுடவியல,; தொல்லியல் மற்றும் குடிசனப்பரம்பல் ரீதியாக இது அதிகம் விவாதத்துக்குரியது. எனினும் இந்த பரப்புரையை மேற்கொள்பவர்கள், வடக்கு மற்றும் கிழக்குக்கு ஓரளவு அரசியல் சுயநிர்ணய உரிமையை வழங்கினால் மட்டுமே, சமூக எற்றத்தாழ்வுகள் மற்றும் தமிழ் சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகள் என்பனவற்றை தீர்க்கமுடியும் என்று சொல்கிறார்கள். இந்தக் கண்ணோட்டம் பாரம்பரிய தாயகம் என்கிற கொள்கையுடன் ஒரு உறவினைக் கொண்டுள்ளது.

சிங்கள சமூகத்தைப் பொறுத்தவரை இரண்டு பிரச்சினைகள் உள்ளன. முதலாவது விவாதத்துக்குரியதும் மற்றும் போட்டியிடுவதுமான வரலாற்று ரீதியான தாயகக் கோட்பாடு. தெற்கில் பிரதான நீரோட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள்;, இந்த நம்பிக்கை (தாயகக் கோட்பாடு) சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளதினால், தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில் ஒரு கருத்தொருமிப்புக்கு வருவதற்கு இது அடிப்படையாக இருக்கமுடியாது என்று சொல்வது போலத் தெரிகிறது.
இரண்டாவதாக தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பெரிய அரசியல் அதிகாரப் பகிர்வினை வழங்குவதை ஏற்றுக்கொள்வது கடினம் என சிங்கள சமூகம் கருதுகிறது. தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளும்போது நாட்டில் தற்போதுள்ள தமிழ் சமூகத்தின் மக்கட்தொகை பரம்பலின்படி அத்தகைய விளைவு பாரிய சமத்துவமின்மையை உருவாக்கும் எனக்கருதப்படுகிறது. சில தமிழர்கள் ஜோர்ஜ் ஓர்வெல்லின் பொழிப்புரையைக் கூறும் மற்றவர்களைவிட அதிகம் சமத்துவமானவர்களாக இருப்பார்கள். முன்னர் கோடிட்டுக் காட்டியபடி, தமிழ் சமூகத்துடன் தொடர்புடைய சனப்பரம்பலின் கண்ணோட்டத்தில் இந்தக் கவலை ஒரு நியாயமான அடிப்படையில் உள்ளதாகவே தோன்றுகிறது.

பின்னர் தமிழர்களில் இந்திய வம்சாவழி தமிழர்களும் மற்றும் அவர்களது கோரிக்கைகளும் உள்ளன. அவர்கள் தோட்டத் தொழிற்துறையில் கலவையான சமூகமாக வாழ்கிறார்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் அவர்கள் முக்கியமான பங்கினை வகிக்கிறார்கள். உண்மையில் இந்த சமூகத்தின் அங்கத்தவர்கள் ஒரு மாதத்துக்கு தங்கள் கருவிகளை கீழே வைத்தால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்துவிடும் எனச் சிலர் வாதிடுகிறார்கள். ஆயினும் இந்த சமூகம் மிகவும் பின்தங்கிய ஒன்றாகவும்  மிகவும் மோசமாக நடத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றாகவும் உள்ளது, அவர்களுடைய சேவை மட்டுமே மிகவும் தீவிரமாகப் பெறப்பட்டது. இருந்தபோதும் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல் தலைவர்களின் உதவியில்லாமலே சில வருடங்களுக்கு முன்பிருந்ததுடன் ஒப்பிடுகையில்  இப்போது அவர்களின் வாழ்க்கை வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த சமூகத்தவர்களால் கோரப்படும் சம்பள உயர்வு மற்றும் சிறப்பான வாழ்க்கை நிலை என்பன நாட்டின் பொருளாதாரத்துக்கு அவவர்கள் ஆற்றும் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் மிகவும் நியாயமான ஒன்றாகும். அவர்களைச் சமமானவர்களாக நடத்தவேண்டியது ஒரு மனித உரிமைச் செயல் மற்றும் இதில் எந்த விவாதத்துக்கும் இடமில்லை.

இறுதியாக நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களைப் பற்றியது. அவர்களில் அநேகர் தெற்கில் உள்ள அரசியல் கட்சியின் ஒரு அங்கத்தவராகவோ அல்லது இந்தக் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களில் ஒருவராகவோ உள்ளார்கள். இந்தப் பிரதேசங்களில் உள்ள தமிழ் சமூகத்தவர்கள், தங்கள் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் அதேவேளை மற்றைய சமூகங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளார்கள், வேறு வார்த்தைகளில் சொன்னால் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்துள்ளார்கள்.

13வது திருத்தமானது எத்தகைய குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும், மாகாண குடிசனப்பரம்பல் பகுதிகளில் வாழும் சமூகங்கள்  அவர்கள் பகுதிகளில் அரசியல் செய்வதற்கும் மற்றும் பல்வேறு மட்டங்களில்  அரசியல் நிருவாக விஷயங்கள் மற்றும் அரசியல் கொள்கை பிரச்சினைகள் என்பனவற்றில் வழிகாட்டுதல்களுக்கு ஏற்றபடி,பாரிய பங்களிப்பில் ஈடுபடுவதற்கு பாதைகளைத் திறந்துள்ளது. மாகாணசபைகளை வைத்திருப்பதற்கான முகவுரை, மக்கள் தாங்கள் எவ்வாறு ஆளப்பட வேண்டும்  என விரும்புகிறார்களோ அதற்கான வழியைத் தருவதுதான், எல்லாவற்றிலும் மேலாக அதுதான் ஜனநாயகம் என்பது, சமத்துவமின்மை பிரச்சினைகளுக்கும் மற்றும் பாகுபாடுகளுக்கும் மாகாணசபையின் கருவுக்குள் மத்திய அரசின் அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரம்பல் என்பனவற்றின் அடிப்படையில் தீர்வு காணப்படல் வேண்டும். இந்தக் கலந்துரையாடலுக்குள் பாரம்பரிய தாயகம் என்பது உள்நுழையக்கூடாது, மற்றும் சமகாலக் கண்ணோட்டத்தில் ஒரு தீர்வை உருவாக்க வேண்டுமே தவிர வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அல்ல. இது அனைத்து சமூகங்களுக்கும் பிரயோகிக்கப்பட வேண்டும் மற்றும் தற்காலச் தலைமுறையின் ஒருமுகமான கண்ணோட்டம்தான் வரப்போகும் எதிர்காலச் சந்ததிக்கு உரியதாக இருக்கவேண்டும்.

திரு. சுப்பிரமணிய சுவாமி வெறுமே மகிந்த ராஜபக்ஸவின் நண்பர் மட்டுமல்ல அவர் ஸ்ரீலங்காவிற்கும் நல்ல உறுதியான ஒரு நண்பர் ஆவார், முதலில் அவர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து தமிழ் தலைவர்களுடனும் அமர்ந்து பேசி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுடன் எவ்வாறு சிறந்த முறையில் செயற்படுவது என்பது தொடர்பாக கருத்தொருமித்த ஒரு மனநிலைக்கு வருவதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும். இது நாடு பிளவுபடக்கூடும், கூட்டாட்சி மற்றும் இரகசிய நிகழ்ச்சி நிரல் என்பன இடம்பெறக்கூடும் என்கிற கற்பனையான பயம் இன்றி கலந்துரையாடல்கள் நடைபெறும் ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும்.

 எஸ்.குமார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com