தமிழ் සිංහල English
Breaking News

வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டை நடத்த முடியாது.!

மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் நாற்காலியில் வெறுமனே இரு உருவங்களை மாற்றவில்லை. இந்த நாட்டிற்கு அவசியமான ஒன்றையே செய்தேன்.

வெளிநாடுகளின் தாளத்திற்கு ஆடும் பிரதமரை நீக்கி, அரசியலமைப்பிற்கு அமைய புதியவரை நியமித்தேன்.

இதன்மூலம் இலக்கு அற்று பயணித்த பிரதமரை நீக்கிவிட்டு, தூரநோக்கு இலக்குடன் பயணிக்கும் ஒருவரை பிரதமராக நியமித்துள்ளேன்.

நான் கரு ஜயசூரியவிடம் பல முறை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. சஜித் பிரேமதாஸவிடமும் அதனையே கூறினேன். ஆனால் அவரும் அதனை ஏற்கவில்லை.

ரணிலுடன் தொடர்ந்து பயணிக்க முடியாததால், இருவரும் ஏற்க மறுத்த பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நியமித்தேன்.

இதனால் ரணிலுடன் போட்டியிடவேண்டிய நிலை வரும் என்று அறிவேன். அதனால் ரணிலை மிதித்துச் செல்லக்கூடிய ஒருவரை பிரதமராக நியமித்துள்ளேன்.

வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டை நடத்த முடியாது. ரணில் உள்நாட்டவர்களை மதிக்காது, வெளிநாட்டவர்களுக்கு அதிக மதிப்பளித்தார்.

நான் சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்தே புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையினையும் நியமித்தேன். இது தவறு என்றால் ரணில் உச்ச நீதிமன்றத்தினை நாடலாம்.

நாடாளுமன்றத்தை நான் பலப்படுத்தியுள்ளேன். நாடாளுமன்றில் எமக்கு தேவையான 113 பெறும்பான்மையை பெற்று விட்டேன்.

புதிய பிரதமருடன் இணைந்து, வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னின்று செயற்படுவேன். வடக்கு கிழக்கில் புதிய வீடுகளை அமைக்க கடந்த மூன்றரை வருடமாக போராடினேன்.

சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது இழுத்தடிக்கப்பட்டது.

எனவே ஐ.நா சபைக்கு இது குறித்து நான் தெளிவுபடுத்தியுள்ளேன். நான் ஐக்கிய நாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவேன். ஐ.நா. எமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களையும் மதிக்கிறேன்.

எனது கொலை முயற்சி குறித்து இந்தியாவுடன் பகைமையை ஏற்படுத்த ரணில் முயற்சித்தார். எனவே நான் இந்தியவுடனும், சர்வதேசத்துடனும் உறவைப் பலப்படுத்தி, அவர்களுடன் இணைந்து பயனிக்க விரும்புகிறேன்.

நான் எடுத்த தீர்மானத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com