தமிழ் සිංහල English
Breaking News

ஹக்கீம், றிசாத் கோரிக்கை ஜனாதிபதியால் ஏற்பு .!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூம் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஷாட் பதியூதீன் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயம் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரி அதன் தலைவர்களிடம் ஜனாதிபதி பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர்  விருப்பம் தெரிவித்த நிலையில் ,  பல கோரிக்கைகளை  அடங்கிய பத்திரம் ஒன்றையும் ஜனாதிபதியும் கொடுத்து விட்டு வந்தார்கள் . இவர்களால் கொடுத்த பத்திரத்தை வாங்கிய ஜனாதிபதி பரீசீலினை செய்து அறிவிப்பதாகவும் தெரிவித்த நிலையில் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சட்டத்தரணிகள் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று தலைவர்கள் கொடுத்த பாத்திரத்தில் ஒப்பம் இட சென்றதாக தகவல் கிடைத்துள்ளது .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com