தமிழ் සිංහල English
Breaking News

நாடு கொந்தளித்த நிலையில் , முஸ்லிம்களை கைவிட்டு உம்ரா செல்ல, பத்துவா தந்தது யார் .!

நாடு ஏதோ  ஒருவகையில் , அதாவது அரசியல் ரீதியாக கொந்தளிக்கும் நிலையில் றிசாத் ,ஹக்கீம் அணியைச் சேர்ந்த பாராளுமன்ற  உறுப்பினர்களை இவ்விரு தலைவர்களும்  உம்ராவுக்கு அழைத்து செல்வது அர்த்தம் என்ன .!

இவர்கள் உங்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படவில்லை என்பது தானே அர்த்தம் . தலைமைத்துவத்தை மீறி போய்விடுவார்கள் என்பதன் காரணத்தினால் , உம்ரா என்ற போர்வையில் , மக்காவுக்கு அழைத்து சென்று   சத்திய வாக்கு எடுப்பதற்கு தானே இவர்களை அழைத்து செல்கின்றீர்கள் இது தானே உண்மை .

இவர்கள் பலதடவைகள் உம்ரா செய்தவர்கள் தானே .! நாடு அரசியல் ரீதியாக கொந்தளிக்கும் நிலையில் இப்பயணம் அவசியமா.!

இலங்கை பெரும்பான்மை சிங்கள சமுகத்தைச்சேர்ந்த பௌத்த நாடு என்பதை யாராலும் மறுக்க  முடியாது . முஸ்லிம்களுக்கு இலங்கையில் இருக்கிற  சுதந்திரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை . முஸ்லிம் நாடுகளில் கூட  முஸ்லிம்களுக்கு சுதந்திரம் இல்லை.

இன்று  முஸ்லிம் கட்சிகளும் , மார்க்க அமைப்புக்களையும்   உருவாக்கி அவர்கள் பயணிக்கின்ற முறையில் சிங்கள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது .   முஸ்லிம்களை பேரின வாதிகள் இனவாதம் கொண்டு பார்க்கவேண்டிய  நிலை உருவானது .

பெரும்பான்மை சிங்கள மக்கள் முஸ்லிம்களை கண்ணியமாக தலையில் தூக்கி வைத்த காலமும் உண்டு . தலையில் தூக்கி வைத்த முஸ்லிம்களை அப்படியே தூக்கி சிங்கள மக்கள் வீசுவதற்கு ஒரு சில முஸ்லிம்கள்  செய்கின்ற கீழ்த்தரமான நடவடிக்கையால் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பாதித்துள்ளது .

பொய்யும் , புரட்டும் , ஏமாற்றுதல்  , மோசடி , முனாபிக் தனம் என்பன முஸ்லிம்கள் மத்தியில் தான் இருக்கின்றது .

மௌலவி மார்கள் என்று சொல்லுகின்ற சிலர் , நல்ல பண்புள்ள ஆலிம்களின் பெயர்களையும் கெடுத்துள்ளார்கள் . மார்க்கமும் எங்கையோ போய்க்கொண்டிருக்கிறது . பணத்துக்கும் , பதவிக்கும் அரசியல் பின்னால் நக்குண்டு நாவிழந்து நிற்கிறார்கள் .

நாட்டுக்கும், மக்களுக்கும், முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் நல்லத்தை எடுத்து சொல்லுவதற்கு உலமாக்கள் இல்லை . அரசியல் வாதிகள் அவர்களுக்கு வேண்டியதை அவர்களுடைய விருப்பத்துக்கு ஏதோ செயிது கொள்ளுகிறார்கள் .

இலங்கையில் சுமார் கிட்டத்தட்ட 23 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் .  23 லட்சம் முஸ்லிம்கள் நாடுபூராகவும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கின்றார்கள் . அதாவது , 1000 பேர் கொண்ட சிங்கள ஒரு கிராமத்தில் 50 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்வதையும் அறிகின்றோம் .

 இப்போது நாட்டில் இனவாதம் உச்சநிலையில் இருக்கின்றது , முஸ்லிம்களை இனவாதம் கொண்டு பாக்கின்றார்கள் . ஒரு சிலர் செய்கின்ற மோசமான காரணத்தினால் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த 23 லட்ச முஸ்லிம்களையும் பாதிக்கின்றது .

தாங்கள் தான் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவர்கள் என்று ஆளுக்காள் சண்டைபிடித்து  சத்தியமும், சாணக்கியம்   என்றவர்கள்  அரசியல் ரீதியாக ஏதாவது தீர்மானம் எடுக்கும் போது ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கவனத்தில் கொண்டு எடுக்க வேண்டும் ,.

தங்களது பதவிகளை தக்கவைத்துக்கொள்ளுவதற்காக வேண்டியும் , பணத்துக்காக வேண்டியும்  ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பாதிப்புக்குள்ளாக்க வேண்டாம் ,.

நாடு அரசியல் ரீதியாக கொந்தளித்து கொண்டிருக்கும் போது , முஸ்லிகளின் எதிர்பார்ப்பை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில்  நீங்கள்  முஸ்லீம் சமுகத்தை  தவிர்க்கவிட்டு உம்ரா என்ற பயணம் மேற்கொள்ளுவது சரியா .!  இந்த பத்துவா தந்தது யார் .!

சரியோ, பிழையோ உங்களது தெளிவான கருத்தை சொல்ல தயங்குவது ஏன் .! உங்களுக்கு முதுலெலும்பு இல்லையா .!

இரு தரப்பினரையும் ஏமாற்ற வேண்டுமா .! நீங்கள் கலிமா சொன்னவர்கள் அல்லவா நீங்கள் .

ஏமாற்றி கழுத்தறுப்பத்தை நிறுத்துங்கள் .! டீலை கூட்டிக்கொள்ள அரசியல் நாடகம் நடாத்த வேண்டாம் .

 இன்று உங்கள் உம்ரா பயணத்தை நிறுத்துங்கள் . மக்களோடு மக்களாக நின்று சரியோ, பிழையோ  ஒரு முடிவை சொல்லுங்கள் .

ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பலியிட வேண்டாம் . ஐ. எஸ் .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com