தமிழ் සිංහල English
Breaking News

சபாநாயருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை .! பாராளுமன்றம் கலைகிறது .!

ஜனாதிபதி மைத்திரி என்று பாராளுமன்றத்தை முடிவிட்டாரோ அன்றே சபாநாயருடைய அதிகாரம் பறிபோய்விட்டது. அவர் ஒரு செத்த பாம்பு மாதிரி ,  ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தை திறந்து கொடுக்கும் வரை அவரால் எதுவும் செய்ய முடியாது . இவர் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர் , சபாநாயகர் கருவை ரணில் பிழையான முறையில் வழிநடாத்திக்கொண்டு இருக்கிறார் .

சபாநாயகர் அதிகாரம் இல்லாத காரணத்தினால் ஏதோ பேசிக்கொண்டு இருக்கின்றார் . இவர் எது பேசினாலும் அது நடக்காது .

எதிர்வரும் 14ந்திகதி பாராளுமன்றம் கூடும் போது ஜனாதிபதி, பிரதமரை நியமித்தது தொடர்பாக விசேட உரை ஆற்றிய பின்னர் பாராளுமன்றம் மறுநாள் ஒத்திவைக்கப்படும் .

மறுநாள் பாராளுமன்றம் கூடும் போது ஐக்கிய தேசிய கட்சியினர் மஹிந்தைக்கு நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டு வருவார்கள் என்றால் இவர்கள் மஹிந்தையை பிரதமராக ஏற்றுக்கொண்டதாக அமையும் . அன்றைய தினம் வரவு செலவு திட்டமும் வர இருக்கின்றது . இரு தரப்பினரும் எவ்வாறு நடந்து கொண்டாலும் பாராளுமன்றம்  கலையும் என்பதுதான் உண்மை .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com