தமிழ் සිංහල English
Breaking News

மஹிந்த ஒன்றும் முட்டாளில்லை – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒன்றும் முட்டாளில்லை என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரச ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

113 பெரும்பான்மை இல்லாமல் பிரதமர் பதவியினை பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ச ஒன்றும் முட்டாளில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று மாலை 7 மணிக்கு முன்னர் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவோம் எனவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேபோல எதிர்காலத்தில் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அராபிய நாடுகள் வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com